இலங்கையில் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பிரத்தியேக கல்வி வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு மேலும் அவர் பதிலளிக்கையில்,
சுகாதார அதிகாரிகள் சாதகமான சமிக்ஞையைக் காட்டினால், இரண்டு வாரங்களுக்குள் பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதிக்கப்படும்.
இரண்டு வாரங்களில் படிப்படியாக பாடசாலைகள் திறக்கப்படும் என்பதால் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன், பிரத்தியேக வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும்.
இதேவேளை இதுவரை 800,000 மாணவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
உடல்நலக் குறைபாடுள்ள மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என குறிபபிட்டுள்ளார்.