யாழில் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு எதிராக போராட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவு தினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாண நகரில் சமூகநீதிக்கான அமைப்பினரின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் சிறிலங்கா தேசிய கொடியை ஏந்தி விடுதலைப்புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது  அவ்விடத்திற்கு விரைந்த யாழ்ப்பாண காவல்துறையினர் தற்போதுள்ள நிலையில் இவ்வாறு ஆட்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த முடியாது என கூறி  போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். 

அவ்வாறு செல்லாவிடின் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
புதியது பழையவை