நாட்டில் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை -இறக்குமதி செய்யப்பட்ட 6 கோடி பெறுமதியான வாகனம் ?

நாட்டில் வாகனங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆறு கோடி ரூபா பெறுமதியான வாகனமொன்று இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இந்த வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாகனத்தின் இலங்கை சந்தைப் பெறுமதி சுமார் ஆறரைக் கோடி என தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா லேன்ட் குரூஸர் 300 ரக வாகனமொன்றே இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கத் தூதரகம் இந்த வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் வாகன இறக்குமதி இடை நிறுத்த உத்தரவு தூதரகங்களுக்கு அமுல்படுத்த்தப்படாது என துறைமுக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை