வவுனியாவில் மின் கம்பத்தை மோதித்தள்ளிய மகிழுந்து


வவுனியா - மூன்று முறிப்பு பகுதியில் மின்சாரக் கம்பத்துடன் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அனுராதபுரம் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற மகிழுந்து ஒன்று வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது கட்டுப்பாட்டையிழந்து வீதி ஓரத்தில் காணப்பட்ட மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து காரணமாக மின்சாரக் கம்பம் உடைந்து விழுந்துள்ளதுடன், அப்பகுதியில் மின்சாரத் தடையும் ஏற்பட்டுள்ளது.

குறித்த மின்சார கம்பத்தைச் சீர்செய்து மக்களுக்கு மின் வழங்கும் நடவடிக்கையை மின்சார சபையினர் முன்னெடுத்துள்ளனர்.

விபத்து குறித்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

புதியது பழையவை