அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக வீ.ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்

அம்பாறை மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர சிரேஷ்ட உத்தியோகத்தரான அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய டி.எம்.எல்.பண்டாரநாயக்க கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பதவியுயர்வு பெற்றுச் சென்றுள்ளார்

இதனை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் பொது நிர்வாக அமைச்சினால் பதில் அரசாங்க அதிபராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதியது பழையவை