விளையாட்டு நடுவரான இளைஞன் யானை தாக்கி பலி

வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி வந்துகொண்டிருந்த இளைஞரொருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக கெப்பித்திகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று (19) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த சிவபாலசுந்தரம் மயூரன் (33வயது) எனவும் தெரியவருகின்றது.

69வது தேசிய பூப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வு கொழும்பில் நடைபெற்று வரும் நிலையில் இவர் அதன் நடுவராக செயற்பட்டு வந்துள்ளார்.

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி ரயிலில் வருகை தந்த அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வீதியை கடக்க முற்பட்ட யானை இவரை தாக்கியதாக தெரியவருகின்றது.

உயிரிழந்த நபர் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 விசாரணைகளை கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை