மட்டக்களப்பு சந்திவெளி ஏரிக்கரை வீதியில் அமைந்துள்ள திருவருள் மிகு பழம்பிள்ளையார் நாககன்னி அம்மன் திருக்கோவிலில் நடத்திய செந்தமிழ் ஆகம அருட்சுனைஞர்களுக்கான பயிற்சி நெறி இறுதி நாள் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
தென்கயிலை ஆதின சிவத்தமிழம் குருபீடம் ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சி நெறியின் இறுதிநாள் நிகழ்வின்போது பயிற்சி பெற்ற செந்தமிழ் ஆகம அருட்சுனைஞர்களுக்கான சான்றிதழ்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.
இப்பயிற்சி நெறியினை திருவருட்செல்வர் உயிரொளி சிவம் சிவத்திரு பிரதாபனார் ஐயா அவர்கள் சிறப்பாக வழங்கியிருந்தார்.
இந்நிகழ்விற்கு தென்கயிலை ஆதீனம், செல்வச்சந்நிதியான் ஆச்சிரமம், உயர் திரு மறவன்புலவு சச்சிதானந்தன், சந்திவெளி பழம்பிள்ளையார் நாககன்னி அம்மன் திருக்கோவில், தமிழர் பாரம்பரிய வழிபாட்டு அமைப்பு, சந்திவெளி அகத்தியர் அறநெறி, சிவனருள் ஒன்றியம், அகில இலங்கை சைவத்தமிழ் மன்றம் போன்ற அமைப்புக்களும் சந்திவெளி கண்ணகி அம்மன் ஆலய பிரதம குருவும் ஒத்தாசை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.