இலங்கையின் வரலாற்றில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு ஒரே நாளில் இரு ஆணையாளர்கள் கடமையேற்று சாதனை !

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் கிழக்கு மாகாண ஆளுரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக நிர்வாக சேவை 01 அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் அவரது நியமனம் மீளப்பெறப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக மா.தயாபரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வருக்கும் ஆணையாளர் தயாபரனுக்கும் இடையே இழுபறி நிலையிருந்த நிலையில் மாநகரசபையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரசபையின் அபிவிருத்திப்பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் நிலவிவந்த நிலையில் இன்று மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் கிழக்கு மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நியமனம் பிற்பகல் மீளப்பெறப்பட்டு மீண்டும் ஆணையாளர் தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரினால் வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஆளுனரினால் இந்த நியமனம் மீளப்பெறப்பட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதியது பழையவை