மட்டக்களப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட காகித நகர் கிராமத்தினுள் கடந்த சில தினங்களாக காட்டு யானையொன்று அட்டகாசம் புரிந்து வருகின்றது.

குறித்த தனியன் யானை இரவு, பகல் பாராது இக்கிராமத்தில் அண்மித்து நிலைகொண்டுள்ளதுடன் இன்று(22) அதிகாலையும் கிராமத்திற்குள் புகுந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைக்கருத்திற் கொண்ட கல்குடாவை சேர்ந்த யானைகளை துரத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் குழுவினர் மற்றும் ஏ விஷன் அனர்த்த சேவைக்குழுவினர் வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து மூன்று நாட்களாக இப்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ள காட்டு யானையைத் துரத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், மக்களின் பாதுகாப்புக்கென யானை வெடிகளும் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை