பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களை கௌரவித்தல் நிகழ்வு மட்டக்களப்பு ஸ்ரீ சித்தாண்டி சித்திரவேலாயுதர் சுவாமி ஆலய முன்றலில் நடைபெற்றது.
சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளை அமைப்பின் தலைவர் மு.முரளிதரன் தலைமையில் மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,கௌரவ அதிதிகளாக சித்தாண்டி ஆலய சித்திரவேலாயுதர் வன்னியமை சி.பாலச்சந்திரன்,கோட்ட கல்வி பணிப்பாளர் க.ஜெயவதனன்,சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் சு.சிவராசா,சிறப்பு அதிதிகளாக வந்தாறு மூலை மத்தியமகா வித்தியாலய பிரதி அதிபர் து.முரளிதரன்,ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
அதிதிகள் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்றி இறைவணக்கத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் ஆரம்பமாகின.
இதன்போது பல்வேறு துறைகளிலும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் பாராட்டப்பட்டதுடன் பெற்றோர் முன்னிலையில் மலர்மாலை அணிவித்து நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்க்பட்டனர்.
அத்துடன் சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) கல்வி பயின்று சாதனை படைத்த 13 மாணவ மாணவிகள் கௌரவிக்ப்பட்டனர்.
குறித்த பாடசாலையில் கல்வி பயின்ற கிருபைரெட்ணம் ஜெயந்தினி என்ற மாணவி முதற் தடவையாக மருத்துவ பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் தமது பெயரினை பதிவு செய்து சித்தாண்டி மண்ணிற்கு பெருமை சேர்த்த பிறேம்குமார் முவிஷிக்கா என்ற 4 வயதுடைய குழந்தையின் சாதனையினை பாராட்டி கௌரவிக்பட்டார்.
இவர் கொரோனா காலத்தில் 55 வகையான பூக்களின் பெயர்களை அடையாளப்படுத்தி ஆசிய சாதனையாளர் புத்தகத்தில் தனது பெயரினை பதிவு செய்துள்ளார்.