வவுனியாவில் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிர்ப்பு-காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால்


ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் திருப்தியில்லை என தெரிவித்து, வவுனியாவில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று(14) காலை 11.30 மணியளவில், வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டர்களின் உறவுகளின் சங்கத்தினரால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், திணிக்காதே திணிக்காதே ஆணைக்குழுக்களை திணிக்காதே, போராடுவோம் போராடுவோம் நீதி கிடைக்கும் வரை போராடுவோம், வேண்டாம் வேண்டாம் மரண சான்றிதழ் வேண்டாம், வேண்டாம் வேண்டாம் இழப்பீடும் வேண்டாம்,
வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும் போன்ற பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு, பாதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க செயலாளர் சிவானந்தம் ஜெனிதா உள்ளிட்ட குழுவினர், போராட்டத்தை முன்னெடுத்தனர்.

புதியது பழையவை