இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
நேற்று இந்தியா சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
அதனையடுத்து, இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார்.முன்னதாக கோவில் நுழைவாயிலில் தேவஸ்தான செயல் அலுவலர் ஜவகர் ரெட்டி, அர்ச்சகர்கள் மரியாதை வழங்கி பிரதமர் மகிந்த ராஜபக்சவை கோவிலுக்குள் அழைத்துச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனர்.
சுவாமி தரிசனத்திற்கு பின்னர் மகிந்த ராஜபக்ச தங்கக் கொடி மரத்தை தொட்டு வணங்கித் தரிசனம் செய்தார்.