ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவிச் செயலாளர் நாயகம் இலங்கை வருகிறார்

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவிச் செயலாளர் நாயகம், கன்னி விக்னராஜா உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.

ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்குச் வரும், கன்னி விக்னராஜா, காலநிலை மாற்ற மாநாட்டின் பின்னர் இலங்கை முன்னடுத்துவரும் நடவடிக்கைகள், கொரோனாவிற்கு பின்னரான பொருளாதார நிலை, சமூக நிலை மற்றும் நிதிப் பயன்பாடுகள் குறித்து ஆராயவுள்ளார்.

மனித வள முன்னேற்றம் மற்றும் நிலையான அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் கன்னி விக்னராஜா, கவனம் செலுத்தவுள்ளதாக இலங்கைக்கான ஐ.நா சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தனது விஜயத்தின் போது அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி திட்டத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய இயக்குனராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை