நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

நுவரெலியா கால்டன் முன்பள்ளியில் நடைபெற்ற நத்தார் கரோல் கீத கலை நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார்.

கலை நிகழ்வில் கலந்துகொண்ட முன்பள்ளி மாணவர்கள் மிகவும் இனிமையாக கரோல் கீதம் இசைத்தனர்.

நத்தார் கரோல் கீதம் இசைத்த கால்டன் முன்பள்ளி மாணவர்களுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நத்தார் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டார்.

கால்டன் முன்பள்ளியின் அதிபரும் பணிப்பாளருமான பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்ரமசிங்க ராஜபக்ஷ கலை நிகழ்வின் நிறைவில் மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கினார்.

குறித்த நிகழ்வில் நுவரெலியா மாநகர சபையின் மேயர் சந்தன கருணாரத்ன, முன்னாள் மேயர் மஹிந்த தொடம்பேகமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை