வவுனியாவில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீடு கையளிப்பு

வவுனியாவில், 4.5 மில்லியன் ரூபா செலவில், இராணுவத்தினால் அமைக்கப்பட்ட வீடு, இன்று கையளிக்கப்பட்டது.

வவுனியா மாவட்டம் பழைய சுந்தரபுரம் கிராமத்தில் வசிக்கும், வடிவேல் சுரேஸ் என்பருக்கே, வீடு அமைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதுடன், வீட்டிற்கு தேவையான தளபாடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், வன்னி பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் சம்பக்க ரணசிங்க, பிரதம விருந்தினராக பங்கேற்று, வீட்டை திறந்து வைத்தார்.

இந்த வீடானது, சோபித தேரர் மற்றும் வவுனியா வார்த்தகர் மயூரதன் ஆகியோரின் நிதி பங்களிப்பிலும், 15 ஆவது சிங்க றெஜிமன்ற் படைப் பிரிவின் வேலை திட்டத்தின் கீழும் அமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில், இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

புதியது பழையவை