காட்டு யானை மற்றும் மனிதர்களின் பிரச்சினைகள் காரணமாகக் கடந்த வருடம் 127 பேர் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடந்த ஆண்டு 360 யானைகள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரதங்களுடன் மோதி ஏற்பட்ட விபத்துகள் உள்ளிட்ட சம்பவங்களால் இவ்வாறு யானைகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 50 சதவீதமான யானைகளின் மரணங்கள் மனிதர்களின் செயற்பாடுகளால் இடம்பெற்றதாக சுட்டிக்காட்டப்பட்டள்ளது.
சுமார் 200 யானைகள் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக மரணித்ததாகத் தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு யானைகள் மற்றும் மனிதர்களின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு 112 மனிதர்களும் 328 யானைகளும் உயிரிழந்ததாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.