2022 ஆம் ஆண்டுக்கான அரச சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்

நாட்டில் அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நாளை (03-01-2022) முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஏற்கனவே வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் நாளை முதல் அரச அதிகாரிகள் பணிக்கு அழைக்கப்படுகிறார்கள்.
புதிய ஆண்டிற்கான அரசினால் விவசாயம், கைத்தொழில் மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் முன்னேற்றங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும் எனவும் அரச சேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி கூறியுள்ளார்.

நாளைக் காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரச சேவை பிரமாணம் செய்து, கடமைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
புதியது பழையவை