இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று(18) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்விற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் அரச தலைவர்கள் மற்றும் பிரதமர்கள், பிரதம நீதியரசர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்டமா அதிபர்கள் உள்ளிட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, முற்பகல் 10 மணியளவில் கொள்கை விளக்க உரை அரச தலைவரினால் முன்வைக்கப்படவுள்ளது.
அந்தக் கொள்கை விளக்க உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் நாளையும் நாளை மறுதினமும் ( 19ஆம், 20ஆம் திகதிகளில்) இடம்பெறவுள்ளது.