அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.