தைப்பூச நன்னாள் முருகனுக்கு உகந்தது என்றாலும் அனைத்து இந்து ஆலயங்களிலும் தைப்பூச விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
முருகனுக்கு அவர் தாயார் பார்வதி தேவியார் வேல் கொடுத்த தினமே தைப்பூச திருநாளாக கொண்ட்டாடப்படுகின்றதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் உலக பிரசித்தி பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் தைபூச விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.