அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்ன முகத்துவாரம் ஆற்றுமுகப் பிரதேசம் தானாக உடைப்பெடுத்துள்ளதுடன் சாகாமம் நீத்தையாறுக்கு அன்மித்த பிரதான வீதியின் மேலாக வெள்ளநீர் பாய்ந்து வருகின்றது.
இதேநேரம் வயல்வெளிகள் யாவும் வெள்ளக்காடுபோல் காட்சியளிப்பதுடன் மக்களது போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாய நிலங்கள் மற்றும் தாழ்நிலப் பிரதேசங்களில் சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பொருட்டும் வெள்ளநீரை வெளியேறும் சின்ன முகத்துவார ஆற்றுமுகப் பிரதேசத்தை அகழ்வது தொடர்பில் பிரதேச செயலக மட்டத்தில் ஆராய்ந்துவரும் நிலையிலேயே இன்று குறித்த பகுதி தானாக உடைப்பெடுத்து வெள்ளநீர் வெளியேறி வருகின்றது.
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்த நிலை ஏற்படும் சந்தர்ப்பம் உள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் பிரதேச செயலாளர் வி.பபாகரன் களவிஜயத்தினனை மேற்கொண்டு வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை அறிந்து கொண்ட நிலையிலேயே ஆற்றுமுகப்பிரதேசம் தானாக உடைப்பெடுத்துள்ளது.