முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கனரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே நேற்று (01)மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தின்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 48 வயதுடைய பிலக்குடியிருப்பு கேப்பாபிலவினை சேர்ந்த கிருஸ்ணசாமி மாரிமுத்து, அதே இடத்தினை சேர்ந்த 17 வயதுயுடைய சூரியகுமார் கரிதாஸ் என்பவர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் ஆனந்தபுரம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த 22வயதுயுடைய சண்முகம் நிறோஜன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் குழப்ப நிலை தோன்றியுள்ளது. கிராம மக்கள் விபத்து இடம்பெற்ற வீதியில் ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.