மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள கடுக்காமுனையில் அமைக்கப்பட்ட சிறிய பாலம் திறந்து வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை பகுதியில் அமைக்கப்பட்ட சிறிய பாலம் ஒன்றைத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (15)மாலை நடைபெற்றது.

இந் நிகழ்வானது அதிதிகளை வரவேற்றதனைத் தொடர்ந்து பாலம் திறந்து வைக்கப்பட்டதுடன், நிர்மாண பலகையின் திரை நீக்கம் செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வு நடைபெற்றது.

கொக்கட்டிச்சோலை அம்பிளாந்துறையை இணைக்கும் பிராதான வீதியில் கடுக்காமுனை பகுதியிலே இந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த பாலமானது 8.3 மீற்றர் நீளம் கொண்டதுடன் 15 மில்லியன் ரூபா நிதியில் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பட்டிப்பளை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் ரிஸ்வி, முற்போக்கு தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் யோ.ரொஸமன், அரச உத்தியோகத்தர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை