இலங்கையில் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களில் நாட்டில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.சமன் குசும்சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு உடனடியாக இறக்குமதி செய்யவேண்டிய மருந்துப் பொருட்களுக்கான பட்டியல் தயரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
எனினும் நாட்டில் தற்போது மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்றாலும், அந்நிய செலாவணி நெருக்கடியை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.