மட்டக்களப்பு மாவட்ட தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள ஊழியர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மற்றும் குடிசன புள்ளிவிபர பணியினை தொடங்குவதற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் 14பிரதேச செயலகங்களிலும் பணியாற்றுகின்ற புள்ளி விபரவியலாளர்களுக்கும் தங்களின் பிரதேச கிராம மட்டங்களில் உள்ள தரவுகளை நேர்த்தியாகவும் தவறு இன்றி செய்வதற்கும் டப் (வுயுடீ) மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களினால் (03) மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
தற்கால நவீன தொழினுட்பத்திற்கு அமைவாக நாட்டினை சுபிற்சத்தின் பால்கட்டி எழுப்பும் நோக்கத்தின் அடிப்படையில் இச்செயற்த்திட்டம் இலங்கையில் சகல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வின் போது மாவட்ட புள்ளிவிபரவியலாளர் வு.ஜெய்தனன் மற்றும் திணைக்கள ஊழியர்கள் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாயிருந்தனர்.