பாணந்துறை பகுதியில் நோயாளர்காவு வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துரை பகுதியில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்
நோயாளர்காவு வாகனத்தின் சாரதியை இலக்குவைத்து குறித்த தாக்குதல் மேற்கோள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும் அடையாளங் காணப்படாதுள்ள நிலையில் பாணந்துரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.