தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை வெள்ளை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ - சமுத்திரராமய விகாரைக்கு அருகில் உள்ள வீட்டிற்கு குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளை நிற உடலையும், சிவந்த கண்களையும் கொண்ட இந்த அணில் குறித்து , பிரதேசவாசிகளால் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும் களுத்துறை வடக்கு பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.