மட்டக்களப்பு நீதிமன்றத்தின் முன் இடம்பெறவிருந்த சம்பவம்


மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் இருக்கும் ஒருவரை விடுவிப்பதாக கூறி குறித்த நபரின் தயாரிடம் 2 இலட்சம் பணம் பெற முயன்ற இருவர் கைசெய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதியின் தாயாரின் சகோதரன் உட்பட இருவரை மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு முன்னால் வைத்து வான் ஒன்றுடன் கைது செய்துள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் தப்பியோடியதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த முதலாம் திகதி காத்தான்குடியைச் சோந்த ஆண் ஒருவர் ஜஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடி பொலிசார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் இருந்து வெளியில் எடுத்து தர 2 இலட்சம் ரூபாவை கல்கமுக பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றிபான் என்பவர் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி முதலாம் பிரிவு மோதினார் லேன் சாவியா வீதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சிரேஷட பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனைக்கமைய மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி முகமட் ஜெஸலி தலைமையிலான பொலிசார் பகல் மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்னால் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது வான் ஒன்றில் வந்திருந்தவர்களை பொலிசார் சுற்றிவளைத்தபோது அங்கிருந்து கப்பம் கோரிய பிரதான நபர் தப்பி ஓடியுள்ள நிலையில் வானில் வந்திருந்த முறைப்பாடு செய்தரின் சகோதரன் மற்றும் வான்சாரதியை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது வான் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகள் ஆவணங்களை மீட்டுள்ளனர்.

குருநாகல் கல்கமுக பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் காசிம் முகமட் றிபான் என்பவர் விளக்கமறியலில் இருக்கும் நபரின் மனைவியடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட உனது கணவருக்கு பல்வேறு வழக்குகள் இருப்பாதக தெரிவித்து அவரை நீதிமன்றில் எந்தவிதமான ஆவனங்களும் இல்லாம் வெளியில் எடுத்துதரமுடியும் இதற்கு 2 இலட்சம் ரூபா கோரியுள்ளார்.

இதனையடுத்து அதனை அவர் மாமியாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் மருமகளிடம் அவன் கதைப்பதை ரைக்கோடிங் செய்து தனக்கு அனுப்புமாறு ஆலோசனை வழங்கிவந்துள்ளார். 

அதில் தொலைபேசியில் பணத்தை கோரியவர் கல்கடுக பிரதேசத்தில் சகோதரனின் வீட்டிற்கு சென்று வந்தபோது அங்கு கதைத்த முகமட் றிபான் குரல் என அடையாளம் கண்டு கொண்ட நிலையில் பணத்தை கோரியவர் மட்டக்களப்பு நீதிமன்றிற்கு முன்னால் வருவார்.

அதன் பிரகாரம் பணத்தைகோரிய குறித்த நபர் கல்கமுவ பிரதேசத்தில் வான் ஒன்றை வாடகைக்கு சாரதியுடன் எடுத்துச்சென்று மட்டக்களப்பு நீதிமன்றிக்கு முன்னால் பகல் வந்தடைந்து காத்திருந்த நிலையில், பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்ப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கைதான இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசர் தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
புதியது பழையவை