நுவரெலியா – திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் சுமார் இரண்டு அடி நீளமான சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே சிறுத்தையின் சடத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.