மட்டக்களப்பில்-யுவதி தூக்கிட்டு தற்கொலை


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதி களுதாவளை பிரதேசத்தைச் சேர்ந்த (28) வதுடைய கணேசன் சோபாலினி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று முன்தினம் (1) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது புதுவருட தினத்தன்று குறித்த பெண்ணுக்கும் தனது காதலனுக்குமிடையே தொலைபேசியில் ஏற்பட்ட தகறாற்றினால் தனது வீட்டின் அறையினுள் தனக்குத்தானே சுருக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சம்பவத்தினை கண்ட குடும்பத்தினர் தூக்கிலிருந்து மீட்டெடுத்து அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது வைத்தியர்கள் யுவதி இறந்துள்ளதனை உறுதிப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டனர்.அதன் பின் சடலம்
நேற்று பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

பிரேத பரிசோதனையின் பின் இன்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

களுதாவளையைச் சேர்ந்த அகால மரணமடைந்த சோபாலினியின் சடலம் இன்று 03.01.2022 அவரது வீட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா)அவர்களின் (Gk) இலவச அமரர் ஊர்தியில் கொண்டு கொடுக்கப்பட்டனர்.



புதியது பழையவை