இடியன் நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் சட்டவிரோத இடியன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்று (17) இரவு குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போது சந்தேக நபரிடம் இருந்து இடியன் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

மேலும், சந்தேக நபரை இன்று (18) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதியது பழையவை