அரச வங்கியொன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால் யுவதி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் குருணாகல், நாரம்பல பிரதேசத்திலுள்ள அரச வங்கிக் கிளையொன்றில் இன்று(03) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வங்கி ஊழியரான யுவதி ஒருவரே காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து காயமடைந்த யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.