நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதற்கமைய,மஹரகம மற்றும் கோட்டே ,கெரவலப்பிட்டிய போன்ற பகுதிகளில் சுமார் 2 மணித்தியாலத்திற்கு மோலாக மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், இன்றிரவு 9 மணிக்கு முன்னதாக மின்சாரம் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.