சந்தையில் அரிசியின் விலை உயர்வு–நுகர்வோர் வீதத்தில் வீழ்ச்சி

சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக அரிசிக்கான நுகர்வு குறைவடைந்துள்ளதாக ஐக்கிய நெல் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சந்தையில் அரிசி விற்பனை குறைவடைந்துள்ளதாக குறித்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சம்பா மற்றும் நாடு அரிசி கிலோ ஒன்று 150 ரூபாவுக்கும், வெள்ளை மற்றும் பச்சை சிவப்பு அரிசி கிலோ ஒன்று 140 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையின் உணவுப் பணவீக்கம் 21 தசம் 5 வீதமாக உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக உலகின் உணவுப் பணவீக்கம் கூடிய நாடுகளின் தரவரிசையில் இலங்கை 12 ஆவது நாடாக தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை