மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் இன்று (16) யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார் என வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
கொண்டயன்கேணியில் இருந்து இன்று அதிகாலை இருவர் காயான்கேணி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, மீராவோடை ஆற்றங்கரை பிரதான வீதியில் வைத்து யானை தாக்கியுள்ளது.
இதன்போது ஒருவர் தாக்கப்பட்டுள்ளதுடன், மற்றவர் தப்பியோடியுள்ளார். அவர்கள் பயணித்த சைக்கிளையும் யானை சேதப்படுத்தியுள்ளது.
வாழைச்சேனை, கொண்டயன்கேணியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கே.தஸீஸ்கரன் (வயது 25) என்பவரே யானையால் தாக்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.