நாட்டில் நிலவிவரும் வறட்சியான காலநிலையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், அனுராதபுரம் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய, சப்பிரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையின் பனியுடனான காலநிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.