இலங்கையில் மேலும் 20 கொவிட் மரணங்கள் நேற்று (29) பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,420 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 409 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 578,051 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.