முல்லைத்தீவில்-இடியன் துப்பாக்கி வெடித்ததால் இளைஞன் காயம்

முல்லைத்தீவு - விசுவமடு பாரதிபுரம் கிராமத்தில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குடும்ப உறவினர்களுக்கிடையில் நேற்று மாலை இடம்பெற்ற முரண்பாட்டுச் சம்பவத்தின் போது இடியன் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது 22 அகவையுடைய பாரதிபுரம் கிராமத்தினை சேர்ந்த சபிசன் என்ற இளைஞன் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 47 மற்றும் 32 அகவையுடைய சந்தேக நபர்கள் இருவரைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளைப் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்குக் கிளிநொச்சி தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு வெடித்த இடியன் துப்பாக்கி மற்றும் தடையங்கள் என்பன விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
புதியது பழையவை