தேவாலயத்தின் மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்

கட்டுநாயக்க வலானகொட  தேவாலயத்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில்   குறித்த தேவாலய கட்டடிடம்  சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க வலானகொட  தேவாலய வளாகத்தில் காணப்பட்ட பழமைவாய்ந்த மரமொன்று இன்று  முற்பகல் 8.30 அளவில் இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக எமது பிராந்திய  செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தேவாலயத்தின் கட்டிடங்கள் உட்ட அருகிலுள்ள  பெண்கள் விடுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த மரத்தினை அப்புறுப்படுத்தும் நடவடிக்கை  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

புதியது பழையவை