முல்லைத்தீவு கடற்கரையில் அகழ்வுப்பணி முன்னெடுப்பு!

முல்லைத்தீவு புதுமாத்தளன் கடற்கரையில், உழவு இயந்திர பாகங்கள் அடையாளம் காணப்பட்ட இடத்தில், இன்று, அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

புதுமாத்தளன் கடற்கரை பகுதியில், மண்ணுள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில, கடந்த 8 ஆம் திகதி, மீனவர்களால் அடையாளம் காணப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தில், கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்ட நிலையில், கடற்கரையில், அலையின் தாக்கம் காணமாக, புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில், கடந்த கால யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட உழவு இயந்திரத்தின் பாங்கள் சில, கரையில் அடையாளம் காணப்பட்டது.

உழவு இயந்திரத்தின் பெரிய ரயர்கள் உள்ளிட்ட பாகங்கள், கடற் கரையில் தென்பட்டுள்ளதுடன், இரும்பு துண்டுகளும் இனங்காணப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, முல்லைத்தீவு பொலிஸார், குறித்த பகுதியை பார்வையிட்டதுடன், உழவு இயந்திரத்தின் பாகங்களை, நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டிப் பார்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்தனர்.

அந்தவகையில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர், கிராம அலுவலர், நீதிமன்ற பிரதிநிதிகள் என பலர் முன்னிலையில், இந்த அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, உக்கிய நிலையில், உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில காணப்பட்ட நிலையில், அகழ்வு பணி நிறைவடைந்துள்ளது.

புதியது பழையவை