கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி

கண்டி ஹசலக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருளுபொத்த பிரதேசத்தில், நேற்று (7) கட்டுத்துவக்கு வெடித்ததில் 70 வயது நபர் மரணமடைந்தார்.

ஹசலக்க, பாடசாலை வீதியை சேர்ந்த நபரே இவ்வாறு மரணமடைந்தார்.

குறித்த நபர் குருளுபொத்த பிரதேசத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர் என்றும் விவசாய நிலத்துக்கு சென்றபோது, விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

கட்டுத்துவக்கை வைத்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை