ஹெப்பற்றிகொல்லாவ பகுதியில் காயமடைந்த நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
10 வயது மதிக்கத்தக்க யானையின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.