பாடசாலைகள் வழமைப்போன்று எதிர்வரும் திங்கற் கிழமை முதல் ஆரம்பம்

பாடசாலைகள் அனைத்தையும் வழமைப்போன்று எதிர்வரும் திங்கற் கிழமை முதல் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கல்வி அமைச்சுக்கு இது தொடர்பான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கள் கிழமை முதல் தரம் ஒன்று முதல் 13 வரையிலான வகுப்புகளின் கல்வி நடவடிக்கை வழமைபோன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் சில விசேட நடைமுறைகள் சுகாதார அமைச்சினால் அறிவிக்க்பட்டு நடைமுறையில் இருந்தன.

இந்த நிலையில், தற்போது நாட்டில் கொரோனா பரவல் நிலைமை கட்டுப்பாட்டுக்குள்ள உள்ள நிலையில், வழமைப்போன்று கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை