பெண்களின் திருமண வயதினை அதிகரிக்க முன்மொழிவு

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதினை 21 அல்லது 25 ஆக அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி பொது மக்களின் ஆலோசனைகளை பெற்று வரும் நிலையிலே, இவ்வாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் பெண் உரிமை செயற்பாட்டாளர்களினால்  இந்த யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன, மத பேதமின்றி பெண்கள் உயர் கல்வியினை தொடர்வதில் அனைவரும் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் குறித்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், முஸ்லிம் மக்களின் மத உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது எனவும் காதி அமைப்பில் காணப்படும் குறைபாடுகள் திருத்தியமைக்கப்பட வேண்டுமெனவும்  முஸ்லிம் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். 
புதியது பழையவை