தெற்கு பசுபிக் கடலின் கீழ் ஏற்பட்ட எரிமலை-சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

தெற்கு பசுபிக் கடலின் கீழ் ஏற்பட்ட எரிமலை வெடிப்பினால்   Tonga  நாட்டை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

கடலுக்கு அடியில் காணப்பட்ட எரிமலையொன்று வெடிப்புக்குள்ளானதன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் வெடிப்புக்குள்ளான எரிமலையில் இருந்து   Tonga  நாடு 65 கிலோ மீற்றர் தூரத்திலேயே காணப்படுவதாகவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவம்  சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அத்துடன், பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த ஏனைய நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
புதியது பழையவை