திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் டிப்பர் வாகனமொன்று மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளதோடு, டிப்பர் வாகனத்தின் சாரதியை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று(09) மாலை இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த சாஹுல் ஹமீட் வயது(76) வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கந்தளாய் பேராறு பகுதியில் தனது காணிக்குள் மண் இட்டு செப்பனிட்டு வந்துள்ளார்.
இவ்வேளையில் இன்றைய தினம் உடைந்த கற்களை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமொன்று காணிக்குள் களி மண்களை கொட்டுவதற்காக பின்பக்கமாக செலுத்திய வேளை டயருக்குள் இறுகி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.