CID கட்டிடத்தின் ஐந்தாம் மாடியில் இருந்து பெண் தற்கொலை

குற்றப் புலனாய்வு பிரிவு அலுவலகத்தின் 5 ஆம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயற்ச்சித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவில் விசாரணைகளுக்காக முன்னிலையாகியிருந்த நிலையில், குறித்த பெண் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் நிதிக் குற்றங்கள் தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பெண் 60 மில்லியன் ரூபா பெறுமதியான நிதி மோசடியில் ஈடுபட்டிருந்ததாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை