தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உறுப்பினரான தங்கவேலு நிமலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
குறித்த நபர் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவரான முத்தப்பன் என்பவரின் கீழ் பணியாற்றியிருந்ததாக கூறப்படுகிறது.
தங்கவேலு நிமலனுக்கு எதிராக சில நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டுள்ளன நிலையில் 2011ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அண்மையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
