எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாணவர்களை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
வகுப்பறையில் 20 மாணவர்கள் காணப்பட்டால் அவர்களை ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு அழைப்பதற்கும்,20 முதல் 40 மாணவர்கள் காணப்பட்டால் அவர்களை இரண்டாக பிரித்து கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வியமைச்சுதீர்மானித்துள்ளது.
40க்கு ம் மேற்பட்ட மாணவர்கள் அவர்களை மூன்று பிரிவுகளாக பிரிப்பதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது
பாடசாலைக்கு அழைக்கப்படாத மாணவர்கள் மாற்றுவழிகள் மூலம் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
