அரசுக்கும் – புலம்பெயர் தமிழருக்கும் இடையே பாலமாக தமிழ் அரசு கட்சி செயல்படும் – சுமந்திரன்

நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வருவதற்கு அரசாங்கத்துக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையிலான பாலமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி செயல்படும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான வழிகளை கண்டறிவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடந்த சர்வகட்சி மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே, புலம்பெயர் தமிழ் மக்களிடமிருந்து முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் தாய்நாட்டில் முதலீடு செய்ய சிறந்த வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் பல மில்லியன் அல்லது பில்லியன் அமெரிக்க டொலர்களில் முதலீடுகளை செய்யத் தயாராக இருக்கின்றனர் என்று இதன்போது சுட்டிக்கட்டினார்.

டயானா கமகேயின் இந்தக் கூற்றை ஆதரித்துப் பேசிய இலங்கதை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பங்கேற்ற எம். ஏ. சுமந்திரன் எம். பி., “இலங்கை சமபிரஜைகள் என்ற வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் பாலமாக இருந்து இந்தப் பணியை ஆதரிப்போம்”, என்று கூறினார்.
புதியது பழையவை